Vijay: "நான் யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை; ஆனால் விஜய் பொறுத்தவரையில்..." - பவண் கல்யாண்

Apr 14, 2026 - 08:31
 0
Vijay: "நான் யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை; ஆனால் விஜய் பொறுத்தவரையில்..." - பவண் கல்யாண்

ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தவெக தலைவர் விஜய் பற்றி பேசியிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜய், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் பவன் கல்யாண், Gen Z இளைஞர்களுடன் உரையாடியபோது, “விஜய் அரசியலில் சமாளிப்பாரா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதிலை Gen Z இளைஞர்களிடம் பவன் கல்யாண் பகிர்ந்திருக்கிறார்.

அவர், “நான் பொதுவாக யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை. எல்லோரும் தங்கள் வேலையைச் செய்யும் திறன் கொண்டவர்கள்தான்.

ஆனால் விஜய் பொறுத்தவரையில், அவர் மிகப் பெரிய நட்சத்திரம். அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்வது நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

விஜய் - பவன் கல்யாண்
விஜய் - பவன் கல்யாண்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, என்.டி.ஏ கூட்டணிக்குள் தவெக-வை கொண்டு வருவதற்கு பவன் கல்யாணுக்கும் விஜய்க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் பேசப்பட்டன.

ஆனால், பவன் கல்யாண் அதை மறுத்து, “நான் விஜயுடன் கடந்த 10 ஆண்டுகளாகவே பேசவே இல்லை. என்.டி.ஏ கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை” என்று கூறியிருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0