பந்தைக் கொடுக்காமல் டிம் டேவிட் செய்த செயல்; கோபமடைந்த நடுவர்கள் - என்ன நடந்தது?

Apr 13, 2026 - 14:33
 0
பந்தைக் கொடுக்காமல் டிம் டேவிட் செய்த செயல்; கோபமடைந்த நடுவர்கள் - என்ன நடந்தது?

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், பந்தை நடுவர்களிடம் கொடுக்க மறுத்த ஆர்சிபி அணியின் டிம் டேவிட்டால் நடுவர்கள் கோபமடைந்த சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

mi  vs rcb match
mi vs rcb match

இதனிடையே போட்டியின்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை டிம் டேவிட் சிக்ஸருக்கு விளாசியிருக்கிறார்.

அப்போது பந்து ஈரமாகிவிட்டதால், நடுவர்கள் அதை மாற்ற முடிவு செய்திருக்கின்றனர்.

மாற்றப்பட்ட புதிய பந்தின் தரத்தைப் பற்றி சந்தேகப்பட்டதால் டிம் டேவிட் அதை தனது கைகளிலேயே வைத்து தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

தவிர ஆட்டத்தைத் தொடங்குவதற்காக நடுவர்களிடம் பந்தை உடனடியாகக் கொடுக்க மறுத்த டிம் டேவிட், பந்தை தனது கையில் வைத்து விளையாடி கொண்டிருந்திருக்கிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த நடுவர்கள் வீரேந்தர் சர்மா மற்றும் ஸ்வரூபானந்த் கண்ணூர், மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து பந்தை வாங்க முயன்றபோதும், அவர் அதை கொடுக்காமல் தன் கைகளில் வைத்துக்கொண்டதால் அவர்கள் கோபமடைந்திருக்கின்றனர்.

ஒரு பேட்டராக பந்தின் தன்மையை ஆய்வு செய்ய அவருக்கு அனுமதி இல்லை என்பதை நடுவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0