அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

Apr 13, 2026 - 19:03
 0
அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா?

திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் சட்டமன்றத்திற்குச் சென்றார்.

கலைஞர்
கலைஞர்

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் நீண்டகால முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அதே வருடத்தில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் 13 தேர்தல்களில் போட்டியிட்டு ஒருமுறை கூடத் தோல்வியைச் சந்திக்காத ஒரே தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையையும் கலைஞர் படைத்திருக்கிறார்.

மறுபுறம், தமிழக மக்களின் புரட்சித் தலைவராக உருவெடுத்த எம்.ஜி.ஆர், 1967-ஆம் ஆண்டு திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றார்.

அவரைத் தொடர்ந்து அதிமுக-வின் தலைமையேற்ற ஜெயலலிதா, 1989-ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் சட்டமன்றப் பயணத்தைத் தொடங்கினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அந்த சமயத்தில் ஜெ அணி, ஜானகி அணி என்று பிரிந்திருந்ததால் சேவல் சின்னத்தில் தான் ஜெயலலிதா போட்டியிட்டிருந்தார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், 1984-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் 1989-ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டிருந்த காலகட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அணியின் சார்பில் தனது சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தவிர 2005 ஆம் ஆண்டு கட்சியைத் தொடங்கிய மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குச் சென்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0