90% பிசினஸ் ஓனர்கள் செய்யும் 'மிகப்பெரிய நிதித் தவறு!' - உங்கள் லாபம் எங்கே போகிறது?

Apr 14, 2026 - 13:01
 0
90% பிசினஸ் ஓனர்கள் செய்யும் 'மிகப்பெரிய நிதித் தவறு!' - உங்கள் லாபம் எங்கே போகிறது?

பல தொழில்முனைவோர்கள் (Business Owners) செய்யும் மிகப்பெரிய நிதித் தவறு என்ன தெரியுமா? கம்பெனியின் பணத்தையும், தங்கள் சொந்தப் பணத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதுதான். பிசினஸில் நல்ல லாபம் வரும்; அதை எடுத்து மீண்டும் பிசினஸிலேயே முதலீடு செய்வார்கள். இதைத் தொடர்ந்து பல வருடங்களாகச் செய்துகொண்டே இருப்பார்கள்.

கல்லாவில் பணம் புரளும். பல கோடிகளுக்கு டர்ன்ஓவர் நடக்கும். ஆனால், அவர்களின் தனிப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டை திறந்து பார்த்தால் பெரிய அளவில் எந்த சேமிப்பும் இருக்காது.

திடீரென்று மார்க்கெட்டில் ஒரு சரிவு அல்லது ஒரு பொருளாதார நெருக்கடி வந்தால் என்ன ஆகும்? பிசினஸும் முடங்கும், உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமையும் ஆட்டம் காணும். ஏனென்றால், நீங்கள் ஈட்டிய லாபம் முழுவதும் உங்கள் வியாபாரத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. வியாபாரம் என்பது பணத்தை உருவாக்கும் இயந்திரம் (Wealth Generator) மட்டுமே. அதுவே உங்கள் தனிப்பட்ட நிரந்தர சொத்து ஆகிவிடாது.

நிதி நிலைமையில் நிலையற்ற தன்மை

இதிலிருந்து தப்பிக்கவும், பிசினஸ் லாபத்தை நிரந்தர செல்வமாக மாற்றவும், ஸ்மார்ட்டான பிசினஸ் ஓனர்கள் 3 முக்கியமான பண விதிகளைப் (Money Rules) பின்பற்றுகிறார்கள்.

விதி 1: பணப்புழக்கத்தைப் பிரியுங்கள் (Separate Cash Flow)

கம்பெனியின் வரவு-செலவு கணக்கும், உங்கள் வீட்டுச் செலவுகளும் ஒன்றல்ல. லாபத்தில் இருந்து உங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதச் சம்பளமாக எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை முதலில் உருவாக்குங்கள். இது உங்கள் தனிப்பட்ட செலவுகளை பிசினஸ் பணத்தில் இருந்து பிரித்து, தெளிவான நிதி நிலைப்பாட்டைத் தரும்.

விதி 2: அசைக்க முடியாத பிசினஸ் ரிசர்வ் (Ironclad Cash Reserve)

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் மிகவும் சகஜம். சில மாதங்கள் வியாபாரம் குறைந்தாலும், கம்பெனியின் வாடகை, சம்பளம் மற்றும் பிற நிர்வாகச் செலவுகளை எந்தப் பதற்றமும் இல்லாமல் சமாளிக்க, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான 'Cash Reserve' இருப்பதை உறுதி செய்யுங்கள். இதுதான் உங்கள் பிசினஸுக்கான மிகப்பெரிய கவசம்.

விதி 3: தனிப்பட்ட சொத்து உருவாக்கம் (Independent Wealth Creation)

அதிக வருமானம் வரும் மாதங்களில் தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக, பிசினஸைத் தாண்டி, உங்கள் பெயரில் மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் போன்ற வேறு முதலீடுகளில் செல்வத்தை உருவாக்குங்கள். இது உங்கள் பிசினஸ் ரிஸ்க்கைக் குறைத்து, உங்களுக்கு நீண்ட கால நிதி சுதந்திரத்தை (Financial Independence) வழங்கும்.

இந்த மூன்று விதிகளையும் சரியாகப் பின்பற்றும் எந்தவொரு ஃபவுண்டரும், தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காமல் பிசினஸை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

Business Workshop by Labham April 15 2026

உங்கள் பணத்தை நிர்வகிக்க ஒரு நேரடி வழிகாட்டல்!

இந்த 3 பண விதிகளை (Reserves, Cash Flow & Wealth) உங்கள் பிசினஸில் எப்படிச் சரியாகக் கணக்கிட்டுச் செயல்படுத்துவது என்பதை ஆழமாகக் கற்றுக்கொள்ள, MSME நிபுணர் மற்றும் ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் 'See Change' ஆனந்த் அவர்கள் நடத்தும் பிரத்யேக ஆன்லைன் வெபினாரில் கலந்துகொள்ளுங்கள்.

வரும் புதன்கிழமை, 15 ஏப்ரல் 2026 அன்று இரவு 7:00 மணிக்கு நடைபெறும் இந்த வெபினாரில் உங்களுக்கான Wealth-building ரோட்மேப்பை உருவாக்க இன்றே பதிவு செய்யுங்கள். (100 இடங்கள் மட்டுமே, முன்பதிவு கட்டாயம்)

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr15-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr15_2026

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0